புதன், 23 செப்டம்பர், 2009

கோலம்போடும் முன் கவனிக்க வேண்டியது

புள்ளி வைக்கும் போது, மிக கவனமுடன் அழகாக வைத்துவிட்டால் கோலம் மிகவும் அழகாக நேர்த்தியாக அமைந்துவிடும். ஆகவே கோலம் போட, முதலில் புள்ளி வைத்து பழகவேண்டும். சிறு கோலமாகவும் பின் பெரிய கோலமாகவும் போட்டு பழகுவது நன்று.

கடைசியாக உள்ள பூக்கோலம் முதலில் 7 புள்ளி பின் 6 புள்ளி என ஒவ்வொன்றாக குறைத்து 4 வரை இருபுறமும் வைக்கவும். இவ்வாறு வைப்பதற்கு இடுக்கு புள்ளி என்று பெயர். நாளை நேர் புள்ளி வைத்து ஒரு கோலம் பார்ப்போம்.

கட்டக்கோலம் போட கட்டங்களை நெருக்கமாக போட்டால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
















LINKS:


1) கட்ட கோலம்
2) சிக்கு கோலம்
3) பூக்கோலம்


ஒவ்வொரு கோலமும் animation ஆக உள்ளது. மேலே உள்ள இணைப்பினை பயன்படுத்தி download செய்யவும். இந்த ‘முறை‘ கோலம் போட்டு பார்ப்பதற்கு எளிமையாக உள்ளதா என பதிவர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

வெள்ளி, 18 செப்டம்பர், 2009

கோலம் தொடர்பான அறிய தகவல்

இந்த வலைப்பூ கோலங்கள் பற்றிய தகவல்களையும் பலவதிமான கோலங்களையும் பகிர்ந்துகொள்ளும் ஒரு தளம்.

கோலம் தொடர்பான அறிய தகவல்களை வரும் தலைமுறையினர் அறிந்துகொள்ள இந்த வலைப்பூவை பார்வையிடுபவர்கள் தங்கள் கருத்துகளை பிண்ணுட்டமாக தெரிவிக்கவும்.


கோலம் ஓர் அறிமுகம்
கலை நயம் உடைய அனைவரையும் கவரும் ஒரு கலையாக கோலம் அமைகிறது. கோலம் இடுதல் ஒரு கலை.
இதில் ஒரு ஆரோக்கிய இரகசியமும் ஒளிந்துள்ளது. கோலம் இடுவதற்காக காலையில் எழுவது உடலுக்கும், மனதிற்கும் நல்லது.
விடியற்காலையில் எழுந்து கோலம் இடும் பழக்கம் ஓசோனிலிருந்து வரும் சுத்தமான காற்று கிடைக்கசெய்கிறது. இடுப்பிற்கும், விரல்களுக்கும் ஒரு பயிற்சியாகிறது.
கோலம் இடுவது ஒரு வகையில் கணக்கு எனலாம். இதனால் நியாபக சக்தி அதிகரிக்க வாய்ப்பாகிறது.
மேலும், கோலம் இடுபவருக்கும் மற்றவருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது என்றால் மிகையில்லை.

கோலம் இடும் முறை
பச்சரிசி மாவை கட்டைவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் நடுவே வைத்து சிறிது சிறிதாக கோடுகளாக இடவேண்டும். இப்பொழுது பெரும்பாலும் கல்லுமாவு கோலமிட பயன்படுத்தப்படுகிறது.
கிராமப்புறங்களில் இன்றும் அதிகாலையில் எழுந்து சானம் (தண்ணீர்) தெளித்து கோலம் இடுவதைப் பார்க்கலாம்.
இந்த பழக்கம் சிறு நகரங்களிலும், சிற்றூர்களிலும் இருந்தாலும் நகர்புறங்களில் இடப்பற்றாக்குறை காரணமாக மாறிவருகிறது.
கோலங்கள் ஸ்டிக்கர்களாக வீட்டின் வாயில்களில் ஒட்டப்படுகிறது.

உபயோகிக்கும் பொருட்கள்
1. அரிசி மாவு
2. சுண்ணாம்பு கல் மாவு (தற்போது அதிகளவில் பயன்படுவது)
3. பெயின்ட்
4. அரிசி மாவு கூழ் (கரைசல்)

கோலத்தின் வகைகள்
1. சிக்கு கோலம்
2. கட்ட கோலம்
3. பூக்கோலம்
4. ரங்கோலி

தமிழர்களின் கலை நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக கோலம் விளங்குகிறது. தமிழ் பெண்களுள் இயற்கையாகவோ தாய் வழியாகவோ இக்கலை கற்றுக்கொள்கிறார்கள்.
திருவிழாக்களில் முதன்மையான இடத்தை கோலம் பிடிக்கிறது. இறை வழிபாட்டிலிலும், வீட்டின் மங்கள விழாக்களிலும், பள்ளி கல்லூரி விழாக்களிலும் கோலமிடும் பழக்கம் இருக்கிறது.
முக்கியமாக தமிழர்களின் திருவிழாவான பொங்கல் திருநாளுக்கு முன் 30 நாட்களும் வாசலில் பெரிய கோலமிடுவது வழக்கம். பொங்கல் விழாவிற்கு மாக்கோலமாக (ஈரமாவில்) வீடு முழுவதும் இடுவது வழக்கம்.

இன்று முதல் இத்தளத்தில் புதிது புதிதாக தினம் ஒரு கோலம் இடம்பெறும். இன்று சிறப்பாக அனைத்து வகையிலும் ஒவ்வொரு கோலம்.














இக்கோலங்கள் போடும் முறை Flash Animation-இல் உள்ளது. இவ் இணைப்பின் மூலம் Download செய்து பார்க்கவும்.
Links:
1. சிக்கு கோலம்
2. கட்ட கோலம்
3. பூக்கோலம்

.